தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை பல்கலைக்கழகத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்த உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.

Published Date: August 14, 2024

CATEGORY: CONSTITUENCY

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை பல்கலைக்கழகத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்த உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். மதுரையில் இந்நிகழ்வில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார்,  மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி, மாநகராட்சி காவல் ஆணையர் லோகநாதன், உதவி ஆட்சியர் பயிற்சி வைஷ்ணவி பால், புதூர் பூமிநாதன்,  மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, மண்டல தலைவர் சரவண புவனேஸ்வரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மக்கள் பிரதிநிதிகள் பலர் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றனர்.

 

Media: Murasoli